தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் செயலி: காரில் சென்ற 3 பேர் உயிரிழப்பு

பில்வாரா: ​ராஜஸ்​தானில் கூகுள் மேப் உதவி​யுடன் சென்ற கார், சேதமடைந்த ஒரு பாலத்தை கடக்க முயன்​ற​தில் 3 பேர் வெள்​ளத்​தில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

ராஜஸ்தானின் சித்​தோர்​கர் மாவட்​டம் கனகேடா கிராமத்​தைச் சேர்ந்த உறவினர்​கள் 9 பேர் அண்டை மாவட்​ட​மான பில்​வா​ரா​வில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்​றனர். இவர்​கள் வழி​பாட்டை முடித்​துக் கொண்டு நேற்று முன்​தினம் அதி​காலை​யில் காரில் சொந்த ஊருக்கு புறப்​பட்​டனர். ஆனால் கனமழை காரண​மாக போலீ​ஸார் சாலை தடுப்​பு​களை ஏற்​படுத்​தி​யிருந்​தனர். இதனால் அவர்​கள் கூகுள் மேப் உதவி​யுடன் மாற்​றுப் பாதை​யில் சென்​றனர்.

இந்​நிலை​யில் சித்​தோர்​கர் மாவட்​டத்​தில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடும் பனாஸ் ஆற்​றின் மீது மூடப்​பட்​டிருந்த ஒரு பாலத்தை இவர்​கள் கடக்க முயன்​றனர். ஆனால் நடு​வழி​யில் ஒரு பள்​ளத்​தில் சிக்​கிய கார் பிறகு வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. அவர்​களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடோடி வந்த வந்த கிராம மக்​கள் படகு மூலம் 5 பேரைமீட்​டனர். பிறகு தாய்​-மகள், மற்​றொரு பெண் என 3 பேர் சடல ​மாக மீட்​கப்​பட்​டனர். 8 வயது சிறுமியை காண​வில்​லை. அவரை மாவட்ட நிர்​வாகத்​தினர்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.