17-வது குழந்தையைப் பெற்ற ராஜஸ்தானின் 55 வயது பெண்

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​தான் மாநிலம் உதய்ப்​பூர் மாவட்​டம் லிலா​வாஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கவாரா ராம் கால்​பெலி​யா, இவரது மனைவி ரேகா (55). இவருக்கு ஜடோல் பிளாக்​கில் உள்ள சுகா​தார மையத்​தில் 17-வது குழந்தை பிறந்​தது. பிரசவம் பார்த்த டாக்​டர் ரோஷன் தராங்கி கூறும்​போது, “ரேகா​வுக்கு இது 4-வது குழந்தை என்​றார். ஆனால், 17-வது குழந்தை என்​பது ஆச்​சரிய​மாக இருக்​கிறது” என்​றார்.

ரேகா​வுக்கு குழந்தை பிறந்​ததற்கு அவரது மகன்​கள், மகள்​கள், பேரக் குழந்​தைகள், கிராமத்​தினர் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். ரேகா​வுக்கு இது 17-வது குழந்​தை​யாக இருந்​தா​லும், 4 ஆண் குழந்​தைகள், ஒரு பெண் குழந்தை என 5 குழந்​தைகள் பிரசவத்​துக்​குப் பிறகு இறந்​து​விட்​டன. தற்​போது ரேகா​வுக்கு 7 ஆண் குழந்​தைகள் 5 பெண் குழந்​தைகள் என மொத்​தம் 12 குழந்​தைகள் உள்​ளன.

இதுகுறித்து கவாரா கூறும்​போது, “எனது 2 மகன்​கள், 3 மகள்​களுக்கு திரு​மண​மாகி​விட்​டது. என் மனைவி ஏற்​கெனவே பாட்​டி​யாகி விட்​டார்” என்​றார். பழைய பொருட்​களை வாங்கி விற்​கும் தொழில் செய்​கிறார் கவா​ரா. குடும்​பத்​தில் பணக்​கஷ்டம் இருந்​தா​லும், கடன் வாங்​கி​தான் பிழைப்பை நடத்​துகிறேன்” என்​கிறார்​ க​வாரா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.