Flipkart SBI Credit Card: இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வழங்குநரான SBI கார்டு மற்றும் மின்வணிக நிறுவனமான Flipkart ஆகியவை இணைந்து Flipkart SBI கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. இது Flipkart, Myntra, Shopsy மற்றும் Cleartrip ஆகியவற்றில் மலிவு விலையில் பொருட்களை வாங்கவும், கேஷ்பேக் வெகுமதிகளை அதிகரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட ஒரு கோ-பிராண்டட் தயாரிப்பாகும்.
Add Zee News as a Preferred Source
Flipkart SBI Credit Card: முக்கிய அம்சங்கள்
– Flipkart SBI கார்டின் ஜாய்னிங் மற்றும் வருடாந்திர ரெனீவல் கட்டணம் ₹500 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் ஆகும்.
– வெற்றிகரமாக விண்ணப்பித்தவுடன், அட்டைதாரர்கள் ₹1,250 மதிப்புள்ள வரவேற்பு நன்மைகளைப் பெறலாம்.
– கிரெடிட் கார்டு ஒரு ஸ்டேட்மெண்ட் சைக்கிளில் 1% எரிபொருள் கூடுதல் கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.
– இந்த காண்டாக்ட்லெஸ் கார்ட் Mastercard மற்றும் VISA கட்டண தளங்களில் கிடைக்கிறது.
– Flipkart SBI கார்டு மூலம், வாடிக்கையாளர்கள் Myntraவில் செய்யும் செலவுகளுக்கு 7.5% கேஷ்பேக்கையும், Flipkart, Shopsy மற்றும் Cleartrip ஆகியவற்றில் செய்யும் செலவுகளுக்கு 5% கேஷ்பேக்கையும் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் இந்த வெகுமதிகளைப் பயன்படுத்தி, மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ், மளிகைப் பொருட்கள், ஃபேஷன், பர்னிச்சர், உபகரணங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பயண முன்பதிவுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Flipkart -இல் உள்ள பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்கலாம்.
Flipkart SBI Credit Card: கேஷ்பெக் கிடைக்கும்
மேலும், Zomato, Uber, Netmeds மற்றும் PVR போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளில் வாடிக்கையாளர்கள் 4% கேஷ்பேக் பெறலாம். மேலும் தகுதியான மற்ற அனைத்து செலவுகளுக்கும் 1% வரம்பற்ற கேஷ்பேக் பெறலாம்.
Flipkart SBI Credit Card: ஆட்டோ-கிரெடிட் ஆஃப் கேஷ்பேக் வசதி
Flipkart SBI கார்டு, ஆட்டோ-கிரெடிட் ஆஃப் கேஷ்பேக் வசதியுடன் வருகிறது. இது ஸ்டேட்மென்ட் உருவாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் SBI கார்டு கணக்கில் உரிமையுள்ள கேஷ்பேக்கை தானாகவே கிரெடிட் செய்ய அனுமதிக்கிறது. இது பிரச்சனை இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது.
Flipkart SBI Credit Card: அறிமுக சலுகைகள்
புதிய கார்டின் அறிமுகத்தைக் குறிக்கும் வகையில், Flipkart மற்றும் SBI கார்டு ஒரு வரையறுக்கப்பட்ட கால வெளியீட்டு சலுகையை அறிமுகப்படுத்துகின்றன. இது விண்ணப்பதாரர்கள் Flipkart செயலியில் கார்டு விண்ணப்ப செயல்முறையை வெற்றிகரமாக முடித்தவுடன் ஒவ்வொரு நாளும் 10 Samsung Galaxy Smartwatches மற்றும் 100 Ambrane வயர்லெஸ் பவர் பேங்குகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
Flipkart SBI கார்டின் முக்கிய அம்சங்கள்
– ஜாய்னிங்க் மற்றும் புதுப்பித்தல் கட்டணம்: ₹500 + GST (திரும்பப்பெறுதல் சாத்தியம்)
– வரவேற்பு நன்மைகள்: ₹1,250 மதிப்புள்ள Flipkart e-கிஃப்ட் அட்டைகள் + கிளியர்ட்ரிப் வவுச்சர்
கேஷ்பேக் வெகுமதிகள்:
– Myntra -வில் வாங்கும் பொருட்களில் 7.5% (ஒரு காலாண்டிற்கு ₹4,000 கேஷ்பேக் வரை)
– Flipkart, Shopsy, கிளியர்ட்ரிப்பில் 5% (ஒரு காலாண்டிற்கு ₹4,000 கேஷ்பேக் வரை)
– Zomato, Uber, Netmeds, PVR -இல் 4% (ஒரு காலாண்டிற்கு ₹4,000 கேஷ்பேக் வரை)
– மற்ற அனைத்து தகுதியுள்ள செலவுகளிலும் 1% வரம்பற்ற கேஷ்பேக் கிடைக்கும்.
பிற நன்மைகள்:
– 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் விலக்கு (ஒரு மாதத்திற்கு ₹400 வரை)
– ஒரு வருடத்தில் ₹3.5 லட்சம் செலவிட்டால் புதுப்பித்தல் கட்டணம் திரும்ப கிடைக்கும்
– ஸ்டேட்மெண்ட் உருவாக்கப்பட்ட 2 நாட்களுக்குள் கார்டு கணக்கில் கேஷ்பேக் தானாக வரவு வைக்கப்படும்
பேமெண்ட் நெட்வொர்க்குகள்: VISA மற்றும் Mastercard
சிறப்பு வெளியீட்டு சலுகை: Samsung ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் அம்ப்ரேன் பவர் பேங்குகளை வெல்லும் வாய்ப்பு.
Flipkart SBI Credit Card: இந்த கார்டு யாருக்கு சிறந்ததாக இருக்கும்?
– அடிக்கடி Flipkart மற்றும் Myntra -வில் ஷாப்பிங் செய்பவர்கள்
– மளிகைப் பொருட்கள், பயணம், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றிற்கு ஃப்ளிப்கார்ட்டில் வாங்கும் குடும்பங்கள்.
– Zomato, Uber, PVR போன்ற வாழ்க்கை முறை பிராண்டுகளில் செலவிடும் இளம் தொழில் வல்லுநர்கள்
இவர்களுக்கு இந்த கார்ட் ஏற்றதல்ல:
– அமேசான் அல்லது ஆஃப்லைன் ஷாப்பிங்கை விரும்புபவர்கள்
– மிகக் குறைந்த வருடாந்திர செலவு (₹1 லட்சத்திற்கு கீழ்) உள்ள பயனர்கள்.
– அதிகமான சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள் (ஃபாரெக்ஸ் மார்க்அப் 3.5%, பிரீமியம் கார்டுகளை விட அதிகம்).
About the Author
Sripriya Sambathkumar