தமிழ் இசை உலகில் ஹிப் ஹாப் இசையை முன்னெடுத்துச் சென்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஆதி – ஜீவா முக்கியமானவர்கள்.
2005-ம் ஆண்டு ஆர்குட் (Orkut) மூலம் சந்தித்த இருவரும், இசையின் மீது காட்டிய ஆர்வத்தின் காரணமாக தமிழில் ஒரு சுதந்திரமான இசைக் குழுவை உருவாக்க முடிவு செய்தனர். அதுதான் 2010-ம் ஆண்டு “ஹிப் ஹாப் தமிழா” இசைக் குழு.
2015-ம் ஆண்டு ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் என மூன்று படங்களுக்கும் இசை அமைத்து தங்களுக்கான இலக்கை நோக்கி பயணித்தனர்.
இந்தப் படங்களின் இசை வெகு மக்களால் கவரப்பட்டாலும் தனி ஒருவன் படத்தின் இசை பெரும் கவனம் பெற்றது. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு தனி ஒருவன் இயக்குநர் ராஜாவுடன் ஹிப்-ஹாப் குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளின் அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்! ராஜா அண்ணா’ஆதி, ஜீவா – நாமெல்லாம் ஒரே காரில் போயிடலாமா?’ எனக் கேட்டது இன்றும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது.
எங்களுக்கு அப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் உற்சாகம் நிறைந்த இதயம்! இந்த நாள் எங்கள் பயணத்தில் எப்போதும் சிறப்பானது” என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…