கச்சத்தீவை இந்​தி​யா​வுக்கு விட்டுக்கொடுக்க முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

ராமேசுவரம்: கச்​சத்​தீவை இந்​தி​யா​வுக்கு விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்​கை​யின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் தெரி​வித்​தார்.

இலங்கை தலைநகர் கொழும்பு​வில் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தார். அப்​போது, மதுரை​யில் நடை​பெற்ற தவெக மாநாட்​டில் கச்​சத்​தீவு உரிமை தொடர்​பாக நடிகர் விஜய் கூறிய கருத்​துகள் குறித்து கேள்வி எழுப்​பப்​பட்​டது.

அதற்கு பதில் அளித்த விஜித ஹேரத், “கச்​சத்​தீவை இந்​தி​யா​வுக்கு ஒரு​போதும் விட்​டுக் கொடுக்​கப் போவ​தில்​லை. தற்​போது தென்இந்​தி​யா​வில் தேர்​தல் காலம் என்பதால், அரசி​யல் தேவை​களுக்​காக ஒவ்​வொரு​வரும் வெவ்​வேறு கருத்​துகளை கூறி வரு​கின்​றனர்.

இந்​தப் பிரச்​சினை ஏற்​கெனவே பலமுறை தேர்​தல் மேடைகளில் பல்​வேறு தரப்​பின​ராலும் பேசப்​பட்டு வந்த ஒன்று தான். மேலும், இது​போன்ற அரசி​யல் கருத்துகளைப் பொருட்​படுத்த வேண்​டிய தேவை​இல்லை” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.