சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். 100 வயதாகும், இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார். இவர் கடந்த வாரம் (, கடந்த 22ம் தேதி,) திடீரென வீட்டில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், தலையில் காயம் ஏற்பட்டது. […]
