நெல்லை: மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதன் காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பகுதியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் […]
