தஞ்சாவூரில் காப்பகத்தில் இருந்தபோது 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி சாலை​யில் உள்ள ஒரு வீட்​டில் அண்​மை​யில் பிடிக்​கப்​பட்ட கண்​ணாடி விரியன் பாம்பு நேற்று முன்​தினம் 22 குட்​டிகளை ஈன்​றுள்​ளது. அவற்றை வனத் துறை​யினர் மீட்​டு, பாது​காப்​பாக வனப் பகு​தி​யில் விட்​டனர்.

தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி சாலை சுந்​தரம் நகர் 5-வது தெரு​வில் உள்ள ஒரு வீட்​டில் பாம்பு புகுந்​துள்​ள​தாக, அருங்​கானூர் காப்பு மற்​றும் சுற்​றுச்​சூழல் அறக்​கட்​டளை காப்​பகத்​துக்கு கடந்த 26-ம் தேதி தகவல் வந்​தது. அதன்​பேரில், காப்பக நிர்​வாகி​கள் அங்கு சென்​று, அங்​கிருந்த 3 அடி நீள கண்​ணாடி விரியன் பாம்பை மீட்​டு, அருங்​கானு​யிர் காப்​பகத்​துக்கு கொண்​டு​வந்​தனர்.

தொடர்ந்​து, அந்​தப் பாம்​பின் உடல்​நலம் குறித்து சோதனை செய்​த​போது, அது கர்ப்​ப​மாக இருப்​பதும், விரை​வில் குட்​டிகளை ஈன்​று​விடும் நிலை​யில் இருந்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அந்த கண்​ணாடி விரியன் பாம்பை காப்​பகத்​தில் பாது​காப்​பாக வைத்து பராமரித்​தனர்.

பாம்புக் குட்டிகள்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை அந்த கண்​ணாடி விரியன் பாம்பு 22 தோல் முட்​டைகளை ஈன்​றது. சிறிதுநேரத்​தில், அந்த முட்​டைகளில் இருந்து பாம்​புக் குட்​டிகள் வெளியே வந்​தன.

இதுகுறித்து காப்பக நிர்​வாகி ஆர்​.சதீஷ்கு​மார் கூறிய​தாவது: கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகள் ஈன்றது குறித்து தஞ்​சாவூர் மாவட்ட வன அலு​வலர் ஆனந்​தகு​மாருக்கு தகவல் அளிக்​கப்​பட்​டது. அவரது அறி​வுறுத்​தலின்​பேரில், தஞ்​சாவூர் வனச்​சரகர் ஜோதி​கு​மார் வழி​காட்​டு​தலில், வனத் துறை​யினரிடம் கண்​ணாடி விரியன் பாம்பு மற்​றும் அதன் குட்​டிகள் பாது​காப்​பாக ஒப்​படைக்​கப்​பட்​டன. பின்​னர், அவற்றை வனத் துறை​யினர் அடர்ந்த வனப்​பகு​தி​யில் விட்​டனர். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.