திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட வகையில், சுமார் 38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் […]
