விவசாயிகளிடமிருந்து ரூ.1,200-க்கு வெங்காயம் வாங்க ஆந்திர அரசு முடிவு

அமராவதி: அமராவ​தி​யில் உள்ள தலைமை செயல​கத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் வேளாண் துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: விவ​சா​யிகளிட​மிருந்து குவிண்​டால் வெங்​கா​யத்தை ரூ.1,200-க்கு வாங்கி அதனை அந்​தந்த மாவட்ட சமூக நலத்​துறைக்கு சொந்​த​மான இடங்​களில் உலர வைக்க வேண்​டும்.

அதன் பின்​னர் உழவர் சந்​தைகள் மூலம் பொது​மக்​களுக்கு விற்​பனை செய்ய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இதனால் விவ​சா​யிகளும் நஷ்டமடைய மாட்​டார்​கள். பொது​மக்​களும் அதிக விலை கொடுத்து வெங்​கா​யத்தை வாங்​கும் நிலை ஏற்​ப​டாது. கள்ள சந்தை விற்​பனை முற்​றி​லு​மாக தடுக்​கப்​படும். இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார்.

ஆந்​திர மாநில மருத்​துவ துறை அமைச்​சர் சத்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் அமராவ​தி​யில் நேற்று மருத்​துவ துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நடந்​தது. அதன் பின்​னர் அமைச்​சர் சத்​யகு​மார் யாதவ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ஆந்​திரா முழு​வதும் கிராமங்​களில் அரசு செல​வில் ‘வில்​லேஜ் கிளினீக்​கு​கள்’ கட்​டப்​படும். ரூ.1,129 கோடி செல​வில் கட்​டப்​படும் இந்த கிளினீக்​கு​கள் மூலம் கிராம மக்​களுக்கு சிறந்த மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​படும். இவை 80 சதவீதம் மத்​திய அரசு நிதி​யின் கீழ் கட்​டப்​படும்​” என்​று தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.