50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பெயர் என்னவோ கிருஷ்ணன்.. ஆனால் அவரிடம் தாண்டவமாடியதோ பகுத்தறிவு. இறை நம்பிக்கையை நேரடியாக இடிக்காமல் மூடநம்பிக்கைகளை சாடவேண்டும், அதே நேரத்தில் எதிராளியின் மனதை புண்படுத்தவும் கூடாது. இப்படியொரு நுட்பமான வழியில் தமிழக மக்களுக்கு பகுத்தறிவை பக்குவமாக ஊட்டியதில், கலைவாணரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.. சுயசிந்தனையின் அவசியத்தை திரைப்படங்கள் வாயிலாக அள்ளித் தெளித்தவர், நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். அதாவது, என்.எஸ் கிருஷ்ணன்.. நாடக கலைஞர்களுக்கு எடுபிடி […]
