ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

புதுடெல்லி: ஜிஎஸ்டி விகித சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள மத்​திய அரசு தீவிர நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இதனால், மாநிலங்​களுக்கு சுமார் ரூ.1.5 லட்​சம் கோடி முதல் ரூ.2 லட்​சம் கோடி வரை வரு​வாய் இழப்பு ஏற்​படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்​து, மாநிலங்​களுக்கு ஏற்​படும் வரு​வாய் பாதிப்பை ஈடு செய்​யும் வகை​யில் மத்​திய அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​கள் சார்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, இமாச்சல பிரதேசம், ஜார்க்​கண்ட், கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப், தமிழ்​நாடு, தெலுங்​கானா மற்​றும் மேற்கு வங்​கம் ஆகிய 8 மாநிலங்​களின் நிதி அமைச்​சர்​கள் செப்​டம்​பர் 3 மற்​றும் 4 தேதி​களில் நடை​பெறும் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டத்​தில் தங்​களது முன்​மொழிவை வழங்க முடிவு செய்​துள்​ளன.

இதுகுறித்து காங்​கிரஸ் கட்சி ஆளும் கர்​நாடக மாநில நிதி​யமைச்​சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறிய​தாவது: மத்​திய அரசின் ஜிஎஸ்டி விகித சீர்​திருத்​தத்​தால் ஒவ்​வொரு மாநில​மும் அதன் தற்​போதைய சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வரு​வா​யில் 15-20 சதவீதத்தை இழக்​கும் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

20 சதவீத ஜிஎஸ்டி வரு​வாய் இழப்பு என்​பது நாடு முழு​வதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைப்பை கடுமை​யாக சீர்​குலைக்​கும். எனவே, வரு​வாய் நிலைபெறும் வரை 5 ஆண்​டு​களுக்கு மாநிலங்​களுக்கு இழப்​பீடு வழங்​கப்பட வேண்​டும். ஜிஎஸ்டி விகிதங்​களைக் குறைத்து அடுக்​கு​களைக் குறைப்​ப​தற்​கான மத்​திய அரசின் தற்​போதைய திட்​டம் நிகர வரி விகிதத்தை 10 சதவீத​மாகக் குறைக்​கும்.

இதனால் ஏற்​படும் வரு​வாய் இழப்பு என்​பது மக்​களை மட்​டுமின்றி வளர்ச்சி பணி​களை​யும் கடுமை​யாக பாதிக்​கும். போது​மான வரு​வாய் ஆதா​ரம் இல்லை என்​றால் அது மாநில சுயாட்​சி​யை​யும் பாதிப்​புக்கு உள்​ளாக்​கும். இவ்​வாறு கவுடா தெரி​வித்​தார். வரு​வாய் பாது​காப்​பைக் கணக்​கிடு​வதற்​கான அடிப்​படை ஆண்டை 2024-25 -ஆக நிர்​ண​யிக்க வேண்​டும் என்று 8 மாநிலங்​கள்​ சார்​பில்​ வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.