பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகை​யில், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் செப்​டம்​பர் 7 வரை மூடப்​படு​கிறது. உள்​ளூர் நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தலை அனை​வரும் கண்​டிப்​பாக பின்​பற்ற வேண்​டும் என கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள்’’ என்​றார்.

பஞ்​சாப் முழு​வதும் இயற்​கை​யின் சீற்​றத்​துக்கு ஆளாகி​யுள்​ளது. வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 30 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 3.50 லட்​சத்​துக்​கும் அதிகமானோர் பாதிக்​கப்​பட்​டு உள்​ளனர்.

பஞ்​சாப் அரசு முன்​ன​தாக, அனைத்து பள்​ளி​கள் மற்​றும் கல்​லூரி​களுக்கு செப்​டம்​பர் 3 வரை விடு​முறை அறி​வித்​திருந்​தது. தற்​போது வெள்ள நிலைமை மேலும் மோச​மாகி​யுள்​ளதையடுத்து இந்த விடு​முறை மேலும் 4 நாட்​களுக்கு நீடிக்​கப்​பட்​டுள்​ளது.

இமாச்சல பிரதேசம் மற்​றும் ஜம்​மு-​காஷ்மீரில் பெய்த கனமழை​யால் பல இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. நெடுஞ்​சாலைகளில் பாறை​கள் உருண்டு விழுந்து போக்​கு​வரத்​தும் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேகவெடிப்​பைத் தொடர்ந்து மிக குறுகிய காலத்​தில் அதிக மழைப்​பொழிவு ஏற்​பட்​டதையடுத்து சட்​லஜ், பியாஸ் மற்​றும் ராவி ஆறுகள் மற்​றும் பரு​வ​கால ஓடைகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது.

இதனால் பஞ்​சாப் மாநிலம் மிக மோச​மான வெள்ள நிலை​மையை எதிர்​கொண்​டுள்​ளது. மேலும், அம்​மாநிலத்​தில் பெய்து வரும் கனமழை​யும் நிலை​மையை இன்​னும்​ மோச​மாக்​கியுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.