சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாதுன் நபி நாளை கொண்டாடப்படும் நிலையில், நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால் டாஸ்மாக் மது விற்பனை மூலம் பணம் கோடி கோடியாக கொட்டி வருகிறது. […]
