வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

புதுடெல்லி: இந்​தியா – சிங்​கப்​பூர் இடையே தூதரக உறவு​கள் ஏற்​பட்டு 60 ஆண்​டு​கள் ஆகிறது. இதை முன்​னிட்டு சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்​தியா வரும்​படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயண​மாக, நேற்று இந்​தியா வந்​தார்.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்​தித்து பேசி​னார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்​திக்கிறார். அப்​போது பசுமை எரிசக்​தி, கப்​பல் கட்​டு​தல், சிவில் விமான போக்​கு​வரத்து மற்​றும் விண்​வெளி உட்பட பல துறை​களில் முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் எனத் தெரி​கிறது. சிங்​கப்​பூர் பிரதம​ராக பதவி​யேற்​றபின், லாரன்ஸ் வாங் இந்​தியா வரு​வது இதுவே முதல் முறை. அவருடன் சிங்​கப்​பூர் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் விவியன் பால​கிருஷ்ணன், வர்த்தக மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் கான் சியாவ் ஹாங், நிதித்​துறை அமைச்​சர் ஜெப்ரி சியாவ் மற்​றும் அதி​காரி​கள் இந்​தியா வந்​துள்​ளனர்.

மகா​ராஷ்டி​ரா​வில் கட்​டப்​பட்​டுள்ள கன்​டெய்​னர் முனை​யத்​தில் சிங்​கப்​பூர் ரூ.8,800 கோடி முதலீடு செய்​துள்​ளது. இதை இரு நாட்டு பிரதமர்​களும் காணொலி மூலம் தொடங்கி வைக்​கின்​றனர். இருதரப்பு வர்த்தக உறவு​களை பல துறை​களில் வலுப்​படுத்​து​வது குறித்​தும் பிரதமர் மோடி​யும், சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்​ஸ் வாங்​கும்​ ஆலோ​சனை நடத்​த உள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.