1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

இந்தியா உட்பட சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக சுசுகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1 கோடி இலக்கை கடந்துள்ள நிலையில், 170 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும் குறிப்பாக மாருதி சுசுகி மூலம் இந்தியாவில் மட்டும் 6 கோடி விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஜப்பானில் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டில் ஹங்கேரி, இந்திய சந்தையில் உற்பத்தி துவங்கிய இந்த மாடல் தொடர்ந்து சீனா, பாகிஸ்தான், கானா போன்ற நாடுகளில் தயாரிக்கபட்டு வருகின்றது.

ஜப்பானில் நவம்பர் 2004ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் 20 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களில் 10 மில்லியன் இலக்கை கடந்துள்ளது. ஸ்விஃப்ட் ஜப்பான் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் ஆண்டின் சிறந்த கார் விருதுகளை வென்றுள்ளது.

ஜப்பான், ஹங்கேரி, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் கானா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


suzuki swift productionsuzuki swift production

உலகளவில் விற்கப்பட்ட 10 மில்லியன் யூனிட்டுகளில், 60% இந்தியாவில், 14% ஐரோப்பாவில், 8% ஜப்பானில் மற்றும் 18% பிற நாடுகளில் விற்பனையானது. இந்தியாவில், 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தோராயமாக 6 கோடி யூனிட்டுகளை விற்பனை செய்யப்பட்டு நாட்டின் சிறிய கார் சந்தையில் முதன்மையான மாடலாக விளங்குகின்றது.


maruti suzuki swift generationmaruti suzuki swift generation

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.