ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லை அருகே உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சில நக்சல்கள் படுகாயமடைந்ததாகவும், அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :