திருநெல்வேலி: நெல்லை ரயில் நிலைய வாசலில் நள்ளிரவு வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக இரண்டு பள்ளி மாணவர்களை காவல்துறை செய்துள்ளது. மேலும் சிலரை தேடி வருவதாக கூறப்படுகிறது. நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு […]
