கிளவுட் சேவைக்கான செலவுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் டேட்டா வவுச்சர்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

சென்னை: கிளவுட் சேவைக்​கான செல​வுத் தொகைக்​காக ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களுக்கு ரூ.15 லட்​சம் வரை டேட்டா வவுச்​சர் வழங்​கும் வகை​யில் தமிழ்​நாடு ஸ்டார்ட் ​அப் டேட்டா வவுச்​சர் திட்​டம் தமிழகத்​தில் அமல்​படுத்​தப்​பட்டு உள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிளவுட் உட்​கட்​டமைப்பு செல​வு​களை குறைப்​ப​தன் மூலம் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் விரை​வாக வளர்​வதற்​கும், எளி​தாக புது​மை​களை உரு​வாக்​கு​வதற்​கும் உதவும் வகை​யில்தமிழ்​நாடு ஸ்டார்ட்​ அப் டேட்டா வவுச்​சர் திட்​டம் 2025-26 நடப்பு நிதி​யாண்டு பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலையில், இத்​திட்​டத்துக்​கான அரசாணை வெளி​யிடப்​பட்​டு, திட்​டம் அதி​காரப்​பூர்​வ​மாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டத்​தின் மூலம் ஒரு ஸ்டார்ட்​ அப் நிறு​வனத்​துக்கு ஆண்​டுக்கு ரூ.5 லட்​சம் என 3 ஆண்​டுக்கு ரூ.15 லட்​சம் வரை கிளவுட் சேவைக்​கான செல​வுத்​தொகை திரும்ப வழங்​கப்​படும். அதே​போல் அமே​சான் இணைய சேவை (ஏ.டபிள்​யூ.எஸ்), மைக்​ரோ​சாஃப்ட் அஸூர், கூகுள் கிளவுட், ஆரக்​கிள், ரயில்​டெல், சிஃபி போன்ற முன்​னணி உலகளா​விய கிளவுட்சேவை நிறு​வனங்​களில் 5 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கட்​ட​ணத் தள்​ளு​படி​யும் கிடைக்​கும். இத்​திட்​டத்​தின்​கீழ் ஸ்டார்ட்​ அப் தமிழ்​நாடு, ஐடி என்டி மையம் மற்​றும் எல்​காட் ஆகிய​வற்​றால் பரிந்​துரைக்​கப்​படும் ஸ்டார்ட்​ அப் நிறு​வனங்​கள்பயன்​பெறலாம்.

கூடு​தல் விவரங்​களை [email protected] என்ற மின்​னஞ்​சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்​து​கொள்​ளலாம். இந்த திட்​டம் இந்​தி​யா​வில் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களுக்கு உகந்த மாநிலங்​களில் ஒன்​றாக தமிழகத்​தின் நிலையை மேலும் வலுப்​படுத்​தும். இவ்​வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.