சென்னை கமலாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை

சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலு​வல​கத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மோப்ப நாய் உதவி​யுடன் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யம் உள்​ளது.

இந்த அலு​வல​கத்​தில் 24 மணி நேர​மும் போலீ​ஸார் சுழற்சி முறை​யில் பாது​காப்​பு பணி​யில் ஈடு​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில், காவல்​துறை தலைமை இயக்​குநர் அலு​வலக மின்​னஞ்​சல் முகவரிக்கு நேற்று காலை ஒரு செய்தி வந்தது. அதில், கமலால​யத்​தில் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக கூறப்​பட்​டிருந்​தது.

இதையடுத்​து, போலீ​ஸார் 5-க்​கும் மேற்​பட்ட வெடிகுண்டு நிபுணர்​கள், மோப்ப நாயுடன் கமலால​யத்​துக்கு வந்​தனர். மாநில அலு​வலக செய​லா​ளர் சந்​திரன் முன்​னிலை​யில், கமலாலயம் முழு​வதும் சோதனை செய்​தனர். ஆனால், வெடிகுண்டு எது​வும் சிக்​க​வில்​லை. வெடிகுண்டு மிரட்​டல் வதந்தி என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தவர் யார் என்​பது குறித்து மாம்​பலம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதே​போல், சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மீண்​டும் நேற்று காலை வெடிகுண்டு மிரட்​டல் வந்த நிலை​யில், உயர் நீதி​மன்ற பாது​காப்​பு பிரிவு காவல் ஆணை​யர் தலை​மை​யில், அனைத்து நீதி​மன்ற அலு​வல​கங்​களி​லும் சோதனை நடை​பெற்​றது. இந்த மிரட்​டலும் வதந்தி என தெரிய​வந்​தது. இதுகுறித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சிறு​வனிடம் விசா​ரணை: இதனிடையே, சென்னை கோயம்​பேடு மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு சில நாட்​களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்ட சம்​பவம் குறித்து கோயம்​பேடு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வந்​தனர். விசா​ரணை​யில், கள்​ளக்​குறிச்​சியை சேர்ந்த 17 வயது சிறு​வன் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து சிறு​வனை பிடித்த போலீ​ஸார்​, அவரிடம்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.