புதுடெல்லி,
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடையால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்களில் நேற்று 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடரும் போராட்டங்களால் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று பதவியை ராஜினாமா செய்தார்.
அதேவேளை, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்கள், மந்திரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். நேபாளத்தில் கட்டுக்கடங்காத வன்முறை நீடித்து வரும் நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “ நேபாளத்தில் அமைதி, ஸ்திரதன்மை, செழிப்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இளைஞர்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. இளம் வயதினர் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. அமைதியை கடைபிடிக்குமாறு நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.