நேபாளத்தில் சிக்கிய 240 பேரை மீட்க தனி விமானம்: ஆந்திர அமைச்சர் லோகேஷ் நடவடிக்கை

புதுடெல்லி: நே​பாளத்​தில் சிக்​கி​யுள்ள ஆந்​தி​ராவை சேர்ந்த 240 பேரை அங்​கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்​பட்​டினம் அழைத்​துவர ஆந்​திர அமைச்​சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறார். நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள் பலர் சிக்​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இவர்​களில் ஆந்​தி​ராவை சேர்ந்​தவர்​களும் உள்​ளனர். இவர்​களில் சிலர் அமராவ​தி​யில் உள்ள ஆந்​திர அதி​காரி​களை தொடர்​பு​கொண்டு தங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர். இதையடுத்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வின் மகனும் மாநில கல்​வித்​துறை அமைச்​சரு​மான லோகேஷ், உடனடி​யாக ஐஏஎஸ் அதி​காரி​களு​டன் அமராவ​தி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, நேபாளத்​தில் சிக்​கி​யுள்​ளவர்​களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேசி​னார்.

காத்​மாண்டு உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் ஆந்​தி​ராவை சேர்ந்த மொத்​தம் 240 பேர் சிக்​கி​யிருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவர்​களிடம், ‘‘உங்​களை விமானம் மூலம் மீட்​கிறோம். அது​வரை நீங்​கள் தங்​கி​யுள்ள அறை​களை விட்டு வெளியே வர வேண்​டாம்’’ என லோகேஷ் கேட்​டுக்​கொண்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் லோகேஷ் பேசுகை​யில், “நே​பாளத்​தில் 240 ஆந்​திர மக்​கள் சிக்கி இருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களிடம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களை மீட்க விரை​வில் தனி விமானம் அனுப்பி வைக்​கப்​படும். அனை​வரும் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு விசாகப்​பட்​டினம் அழைத்து வரப்​படு​வர்” என்​றார்.

தெலங்​கானாவை சேர்ந்த நூற்​றுக்கு மேற்​பட்​டோரும் நேபாள கலவரத்​தில் சிக்கி இருப்​ப​தாக தெரிய​வந்​துள்​ளது. இவர்​களுக்​கென டெல்​லி​யில் உள்ள தெலங்​கானா பவன் அதி​காரி​களின் தொலைபேசி எண்​களை இணை​யத்​தில் தெலங்​கானா அரசு வெளி​யிட்​டுள்​ளது. இவர்​கள் தனி விமானம் மூலம் ஹைத​ரா​பாத் அழைத்து வரப்​படு​வார்​கள் என தெலங்​கானா அமைச்​சர்​கள் உறு​தி அளித்​துள்​ளனர்​.நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த ஒருவரிடம் நேற்று வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் பேசிய அமைச்சர் லோகேஷ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.