அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச

கொழும்பு: இலங்​கை​யில் தற்​போது ஆட்​சி​யில் இருக்​கும் தேசிய மக்​கள் சக்தி கூட்​ட​ணி, தேர்​தலுக்கு முன் அளித்த வாக்​குறு​தி​யின்​படி முன்​னாள் அதிபர்​களின் சலுகைகளை ரத்து செய்​யும் மசோ​தாவை கொண்டு வந்​தது. இந்த மசோதா இலங்கை நாடாளு​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் நிறைவேற்​றப்பட்​டது.

இதையடுத்து முன்​னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80), கொழும்​பு​வில் உள்ள அரசு வீட்டை விட்டு நேற்று வெளி​யேறி​னார். ராஜபக்ச கடந்த 2015 முதல் இந்த வீட்​டில் வசித்து வந்​தார்.

ராஜபக்ச கடந்த 2004 முதல் 2005 வரை பிரதம​ராக​வும் 2005 முதல் 2015 வரை அதிப​ராக​வும் பதவி வகித்​தார். பிறகு மீண்​டும் 2019 முதல் 2022 வரை பிரதம​ராக பதவி வகித்​தார். அவர் தற்​போது அம்​பாத்​தோட்டை மாவட்​டம், தங்​கல்ல பகு​தி​யில் இருக்​கும் வீட்​டில் குடியேறு​வ​தாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.