இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய இன வன்முறை நடந்த மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கால் பதிக்க உள்ளார். மேலும், ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். மணிப்பூரில் கடந்த இரு ஆண்டுகளாக இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில், இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து மத்திய பாதுகாப்பு […]
