சென்னை: தொழில்நகரமான ஓசூரில், ஒசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை ஓஎம்ஆர் சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதுபோல், ஓசூர் அருகில் உள்ள பாகலுார் பைபாஸ் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, சாட்டிலைட் ரோடு ஆகிய சாலைகளின் இரு புறங்களிலும், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு, கர்நாடக […]
