ஆசியக் கோப்பை 2025 தொடரில் நேற்று ஞாயிற்றுகிழமை நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றுக்கான தகுதி வாய்ப்பை சற்று இழந்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே 2 வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், பாகிஸ்தான் தனது அடுத்த சுற்று கனவை நனவாக்க கட்டாய வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.
Add Zee News as a Preferred Source
India notch up an effortless win
The contingent offered little to nothing with ball & bat, dominating all three facets of the game to record a thumping win over their arch rivals.#INDvPAK #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/LUWFZAJ0tm
— AsianCricketCouncil (@ACCMedia1) September 14, 2025
குரூப் A புள்ளி பட்டியல்
இந்தியா 2 போட்டிகள் விளையாடி 2 வெற்றி
பாகிஸ்தான் 2 போட்டிகள் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி
ஓமன் 1 போட்டியில் விளையாடி 1 தோல்வி.
ஐக்கிய அரபு அமீரகம் 1 போட்டியில் விளையாடி 1 தோல்வி.
பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
பாகிஸ்தான் அணியின் சூப்பர் 4 சுற்று கனவு அவர்களின் கையில் தான் உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணியை செப்டம்பர் 17 அன்று நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன், குரூப் A பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும். வேறு எந்த போட்டியின் அணியையும் அவர்கள் சார்ந்திருக்க தேவையில்லை. ஒருவேளை, செப்டம்பர் 17 அன்று நடைபெறும் போட்டியில், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை சந்தித்தால், அவர்களது சூப்பர் 4 வாய்ப்பு மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்திருக்கும்.
பாகிஸ்தான் நிலை என்ன?
பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோற்று, அதே சமயம் ஐக்கிய அரபு அமீரகம் ஓமனுக்கு எதிராக செப்டம்பர் 15 இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால், ஐக்கிய அரபு அமீரகம் அணி 4 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் 2 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேறும். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் சூப்பர் 4 கனவு, வரும் புதன்கிழமை செப்டம்பர் 17 அன்று நடைபெறும் போட்டியில் அடங்கியுள்ளது. அந்த போட்டியில் பெரும் வெற்றி, அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான வாய்ப்பை உருவாக்கும். ஒருவேளை பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தால், அவர்கள் தொடரிலிருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.
About the Author
RK Spark