TVS iQube Smartwatch launched – ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் 6.50 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல்லை கொண்டாடும் விதமாக, டிவிஎஸ் நிறுவனம் ‘நாய்ஸ்’ (Noise) என்ற பிரபல ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஐக்யூப் வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்யேக ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை மற்றும் சந்தா விவரம்

இந்த பிரத்யேக ‘ஐக்யூப் நாய்ஸ்’ (iQube Noise) ஸ்மார்ட்வாட்ச், டிவிஎஸ் மோட்டாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிமுக விலையாக ரூ.2,999-க்கு கிடைக்கிறது. இதனுடன், நாய்ஸ் கோல்டு சந்தா (Noise Gold subscription) 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ஐக்யூப் ஸ்மார்ட்வாட்ச்: என்ன சிறப்பு?

இந்த ஸ்மார்ட்வாட்ச், ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை வழங்குகிறது. இந்த வாட்ச், உங்கள் வாகனத்தின் முக்கியத் தகவல்களை உங்கள் மணிக்கட்டிலேயே பார்க்க உதவுகிறது.

  • வாகன நிலை: ஸ்கூட்டர் பூட்டப்பட்டுள்ளதா, திறக்கப்பட்டுள்ளதா, சார்ஜ் ஆகிறதா அல்லது ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதைத் தெளிவாகக் காட்டும்.
  • பேட்டரி நிலை (SoC): பேட்டரியின் சதவீதம் மற்றும் சார்ஜ் குறைவாக இருக்கும்போது (20% க்குக் கீழ்) எச்சரிக்கை போன்ற தகவல்கள் கிடைக்கும்.
  • பயணிக்கக்கூடிய தூரம் (DTE): தற்போதைய பேட்டரி நிலையில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லும். இது உங்கள் பயணத்தைத் திட்டமிட மிகவும் உதவியாக இருக்கும்.
  • டயர் அழுத்த கண்காணிப்பு (TPMS): டயர்களின் தற்போதைய பிரெஷர் சரியான பிரஷெருக்கான வழிகாட்டுதலையும் வழங்கும் (ST மாடலுக்கு மட்டும்).
  • சார்ஜ் குறித்த தகவல்கள்: நிகழ்நேரத்தில் சார்ஜிங் முன்னேற்றம் மற்றும் முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் ஆகும் போன்ற விவரங்கள் கிடைக்கும்.
  • பாதுகாப்பு வசதிகள்: ஸ்கூட்டரில் திருட்டு அல்லது இழுத்துச் செல்லுதல் போன்ற அசைவுகள் ஏற்பட்டால், ஸ்மார்ட்வாட்சில் எச்சரிக்கை வரும். மேலும், வாகனத்தில் விபத்து ஏற்பட்டால், அது குறித்த அறிவிப்புகளையும் ஸ்மார்ட்வாட்ச் அனுப்பும்.
  • Geofence அறிவிப்புகள்: வாகனம் பதிவு செய்யப்பட்ட புவி எல்லையைத் தாண்டும்போது அறிவிப்புகள். மொபைல் ஆப் மற்றும் வாட்சில் கிடைக்கும்.
  • Safety Visual Cues: நிறக் குறியீடு செய்யப்பட்ட டைல்கள் (பச்சை = சிறந்தது, சிவப்பு = கவனம் தேவை) மூலம் முடிவெடுக்கும் நேரத்தையும் கவனச் சிதறலையும் குறைக்க உதவும்


tvs iqube smart watch Featurestvs iqube smart watch Features

iQUBE ஸ்மார்ட்வாட்சின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • 1.43” AMOLED டிஸ்ப்ளே: துல்லியமான வண்ணங்கள் மற்றும் தெளிவான காட்சிக்காக, எப்போதும் இயங்கும் (Always-On) வசதியுடன் கூடிய 1.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இதில் உள்ளது.
  • புளூடூத் அழைப்பு: ஸ்கூட்டரில் பயணிக்கும்போதே அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் இந்த புளூடூத் அழைப்பு வசதி உதவுகிறது.
  • உடல்நல கண்காணிப்பு: உங்கள் உடல்நலனைக் கண்காணிக்க உதவும் அம்சங்களான இதயத் துடிப்பு (Heart Rate), SpO2 (ஆக்சிஜன் செறிவு) மற்றும் உறக்கத்தைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் உள்ளன.
  • IP68 தரநிலை: தூசி மற்றும் நீர்புகாத (Dust & Water Resistance) IP68 தரச்சான்று பெற்றிருப்பதால், எத்தகைய வானிலையிலும் இதைப் பயன்படுத்தலாம்.
  • பிரத்தியேக ஐக்யூப் வாட்ச் ஃபேஸ்கள்: டிவிஎஸ் ஐக்யூப் உரிமையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாட்ச் ஃபேஸ்கள், உங்களின் தொழில்நுட்பத் தகுதியை மேம்படுத்துகின்றன.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.