எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ​மாநில அரசே எம்​எல்​ஏக்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதி​யாக ரூ.3 கோடி வழங்​கும் நிலை​யில், எம்​.பி.க்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதியை ரூ.10 கோடி​யாக மத்​திய அரசு உயர்த்தி வழங்க வேண்​டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதற்​காக `திஷா’ குழு​வின் ஆய்​வுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்ற உள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​தார்.

சென்னை தலை​மைச் ​செயல​கத்​தில் முதல்​வர் ஸ்​டா​லின் தலை​மை​யில் மாநில அளவி​லான வளர்ச்​சி, ஒருங்​கிணைப்பு மற்​றும் கண்காணிப்​பு (திஷா) குழுவின் 5-வது ஆய்​வுக்கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் வரவேற்​றார். இக்​கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: மத்​திய அரசின் தீன்​த​யாள் அந்​தி​யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்​வா​தார இயக்​கம் திட்​டத்​தின் கீழ் 45,312 சுயஉதவிக் குழுக்​களுக்கு சுழல்​ நி​தி​யாக ரூ.67.97 கோடி, சமு​தாய முதலீட்டு நிதி​யாக 75,127 சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.801.62 கோடி, நலிவு நிலைக்​குறைப்பு நிதி​யாக 13,546 கிராம வறுமை ஒழிப்​புச் சங்​கங்​களுக்கு ரூ.75.73 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள், திருநங்​கைகள் மற்​றும் பழங்​குடி​யினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுயஉதவிக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் மூலம் 1 லட்​சத்து 57,316 பேர் பயனடைந்​துள்​ளனர். 2025-26 பட்​ஜெட்​டில் மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்​கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. கடந்த செப். 3-ம் தேதி வரை 1 லட்​சத்து 46,100 சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.13,062 கோடி வங்​கிக் கடன் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

நாடாளு​மன்ற உறுப்​பினர் தொகுதி மேம்​பாட்​டுத் திட்​டத்​தில் ரூ.1,274 கோடி நிதி வரப்​பெற்​று, 9,755 பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. 2,290 பணி​கள் முன்​னேற்​றத்​தில் உள்​ளன. தமிழகத்​தில் சட்​டப்​பேரவை உறுப்​பினர் தொகுதி மேம்​பாட்​டுத் திட்​டத்​தில் நிதி​யாண்​டுக்கு ரூ.3 கோடி வீதம், 234 தொகு​தி​களுக்​கும் ரூ.702 கோடி ஒதுக்​கப்​பட்​டு, அடிப்​படை, உட்​கட்​டமைப்பு வசதி​கள் செய்​யப்​படு​கின்​றன. மாநில அரசே எம்​எல்​ஏக்​களுக்கு ரூ.3 கோடி வழங்​கு​வ​தால், எம்​.பி.க்​கள் நிதியை ரூ.10 கோடி​யாக உயர்த்த வேண்​டும். இதை வலி​யுறுத்தி இக்​கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்றி மத்​திய அரசுக்கு அனுப்​பப்​படும்.

பிரதமரின் `ஒரு துளி நீரில் அதிக பயிர்’ என்ற திட்​டத்​தில் நுண்​நீர் பாசனம் அமைக்க விவ​சா​யிகளுக்கு 55 சதவீதம் மானிய​மும், மற்ற விவ​சா​யிகளுக்கு 45 சதவீதம் மானிய​மும் வழங்​கப்​படு​கிறது. ஆனால், திமுக அரசு கூடு​தல் நிதி ஒதுக்கி 100 சதவீதத்தை சிறு, குறு விவ​சா​யிகளுக்​கும், 75 சதவீதம் மானி​யத்தை இதர விவ​சா​யிகளுக்​கும் வழங்கி வரு​கிறது. 12 சதவீத ஜிஎஸ்​டியை தமிழக அரசே ஏற்​கிறது. இந்த திட்​டத்​தில் கடந்த 2 ஆண்​டு​களில் 1 லட்​சத்து 50,560 ஹெக்​டேர் பரப்​பில் 1 லட்​சத்து 57,279 விவ​சா​யிகள் ரூ.1,312 கோடிக்​கும் அதி​க​மான நிதிப்​பயன்​களை பெற்​றுள்​ளனர்.

தமிழகத்​தில் 54,449 குழந்​தைகள் மையங்​களில் 22 லட்​சம் குழந்​தைகளுக்​கும், 5.50 லட்​சம் கர்ப்​பிணி​கள், பாலூட்​டும் தாய்​மார்​களுக்​கும் சத்​து​மாவு வழங்​கப்​படு​கிறது. இதனால் 25 சதவீத​மாக இருந்த குழந்​தைகளின் உயரக் குறை​பாடு 11.8 சதவீத​மாக​வும், 14.6 சதவீத​மாக இருந்த மெலிவுத் தன்மை 3.6 சதவீத​மாக​வும், 22 சதவீத​மாக இருந்த குழந்​தைகளின் எடை குறைவு 5.7 சதவீத​மாக​வும் குறைந்​துள்​ளது. இதுத​விர, ஊட்​டச்​சத்தை உறுதி செய்​யும் திட்​ட​த்தில் முதல்​கட்​ட​மாக 1 லட்​சத்து 7,006 ஊட்​டச்​சத்து குறை​பாடுடைய குழந்​தைகளில் 77.3 சதவீதம் பேரும், 2-ம் கட்​டத்​தில் 80.6 சதவீத குழந்​தைகளும் இயல்பு நிலைக்​குத் திரும்​பி​யுள்​ளனர். மத்​திய அரசு தனது நிதியை சரி​யான நேரத்​தில் மாநில அரசுக்கு வழங்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.தொடர்ந்​து, அமைச்​சர்​கள் துறை வாரி​யான திட்​டங்​கள் குறித்து விளக்​கினர். குழு​வின் உறுப்​பினர்​களாக உள்​ள எம்​.பி.க்​கள்​, எம்​எல்​ஏக்​கள்​ பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.