சாய் சுதர்சனுக்கு ஆப்பு… மிரட்டும் முக்கிய வீரர் – இனி நம்பர் 3 இடத்தில் இவர் தானா…?

India National Cricket Team: இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் (Asia Cup 2025) விளையாடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இந்திய அணிக்கு 4-5 போட்டிகள் உள்ளன. இறுதிப்போட்டி வரும் செப். 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Team India: இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள்

ஆசிய கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணிக்கு (Team India) அடுத்தடுத்த பல்வேறு தொடர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அக்டோபரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக உள்நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகள்; அக்டோபர் – நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களின் நாட்டிலேயே 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகள்; அடுத்து நவம்பர் – டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் 2 டெஸ்ட், 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகள்; அடுத்தாண்டு ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

Team India: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகள்

மொத்தமாக அடுத்த 4 மாதங்களில் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகள், 9 ஓடிஐ போட்டிகள், 15 டி20ஐ போட்டிகளில் இந்தியா மோத உள்ளது. இதற்கு பின் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கிவிடும். டி20ஐ மற்றும் ஓடிஐ போட்டிகள் அடுத்தடுத்து இருந்தாலும் இந்திய அணி டெஸ்ட் போட்டி அட்டவணையில் பெரிய இடைவெளி உள்ளது. அதாவது வரும் நவம்பரில் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா டெஸ்ட் போட்டியையே விளையாட இருக்கிறது. –

2026 ஆகஸ்டில் நியூசிலாந்து அணியுடன் அவர்களின் நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகள், 2026 அக்டோபரில் இலங்கை அணியுடன் அவர்களின் நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகள், 2027 ஜனவரியில் ஆஸ்திரேலியா உடன் உள்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் மூன்று உள்நாட்டு தொடர்களும், இரண்டு வெளிநாட்டு தொடர்களும் உள்ளன.

Team India: உள்நாட்டு தொடர் ரொம்ப முக்கியம்

இந்திய அணி முதலிரண்டு முறை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (WTC Finals 2025) தகுதிபெற்றிருந்தது, கடந்த முறை தகுதிபெறவில்லை. இரண்டு முறை WTC பைனலுக்குச் சென்றதற்கு காரணம் உள்நாட்டு தொடர்களில் பெற்ற வெற்றி. கடந்த முறை WTC பைனலுக்குத் தகுதிபெறாததற்கு உள்நாட்டில் நியூசிலாந்திடம் வைட்வாஷ் தோல்வியை பெற்றதே காரணம் ஆகும். எனவே இந்திய அணி அடுத்து உள்நாட்டில் நடைபெறும் மூன்று டெஸ்ட் தொடர்களுக்கும் (மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா) பலமான ஸ்குவாடை அமைக்க திட்டமிடும்.

Sai Sudharsan: நம்பர் 3 ஸ்பாட்டும், சாய் சுதர்சனும்…

அப்படியிருக்க தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு பெரும் சவால் என்றால் நம்பர் 3 ஸ்பாட் தான். புஜாராவுக்கு பின் பல வீரர்களை இந்திய அணி அந்த ஸ்பாட்டில் முயற்சித்திருக்கிறது. ஆனால் யாரும் இன்னும் செட்டாகவில்லை. சாய் சுதர்சன் (Sai Sudharsan), கருண் நாயர் ஆகியோர் கடந்த இங்கிலாந்து தொடரில் கம்பீர் – கில் ஜோடி முயற்சித்தது. ஆனால் முழு பலன் இல்லை. கருண் நாயரின் வயது காரணமாக அவருக்கு அடுத்து வாயப்பு கிடைப்பதில் சந்தேகம். சாய் சுதர்சன்தான் நம்பர் 3இல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devdutt Padikkal: சாய் சுதர்சனுக்கு ஆப்பு

ஆனால், தற்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல் 150 ரன்களை அடித்து பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளார். நம்பர் 3இல் வந்த சாய் சுதர்சன் 73 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) தொடர்ந்து உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக பங்களித்து வருவாதல் டெஸ்ட் அணியில் நம்பர் 3இல் படிக்கல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் சாய் சுதர்சனுக்கு ஸ்குவாடில் இடம் கிடைப்பதும், பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பதும் கடினம் என கூறப்படுகிறது. இருவரும் இடது கை பேட்டர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Team India: இந்தியா ஏ vs ஆஸ்திரேலியா ஏ

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 532 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளைக்கு முன் வரை 7 விக்கெட்டுகளை இழந்து 531 ரன்களை எடுத்திருக்கிறது. இன்னும் ஒரு செஷன் பாக்கியிருக்கிறது. இந்த போட்டி டிராவில் முடியும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.