“நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்

நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்​சாண்டி வேலை காட்ட வேண்​டாம். வரும் தேர்​தலில் நீங்​களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுக​வுக்கு தவெக தலை​வர் விஜய் சவால் விடுத்​தார்.

நாகை புத்​தூர் அண்ணா சிலை அருகே திரண்​டிருந்த தொண்​டர்​கள் மத்​தி​யில் தவெக தலை​வர் விஜய் நேற்று பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மீன் ஏற்​றும​தி​யில் 2-வது இடத்​தில் இருக்​கும் நாகை​யில், நவீன வசதி​யுடன் மீன்​களை பதப்​படுத்​தும் தொழிற்​சாலைகள் இல்​லை. மீனவ மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் இல்​லை.

இலங்கை கடற்​படை​யால் தமிழக மீனவர்​கள் தாக்​கப்​படு​வதை கண்​டித்து குரல் கொடுப்​பது நமது கடமை. நாகை​யில் 14 ஆண்​டு​களுக்கு முன்பு மீனவர்​கள் தாக்​கப்​பட்​டதை கண்​டித்து பொதுக்​கூட்​டம் நடத்​தினோம். நான் எப்​போதும் மக்​களு​டன்​தான் இருக்​கிறேன். அதே​நேரத்​தில், ஈழத் தமிழர்​களுக்​காக துணை நிற்​பதும் நமது கடமை. மீனவர் பிரச்​சினை​யில் திமுக​தான் கபட நாடகம் நடத்​துகிறது.

வெளி​நாட்​டில் முதலீ​டா? – தமிழக முதல்​வர் ஒவ்​வொரு முறை வெளி​நாடு பயணம் சென்​று​விட்டு வரும்​போதெல்​லாம், பல ஆயிரம் கோடி முதலீடு என்று சொல்​கிறார். அவர் மனதை தொட்டு சொல்​லட்​டும், வெளி​நாட்டு முதலீடா இல்லை வெளி​நாட்​டில் முதலீ​டா? ஒட்​டுமொத்த தமிழகத்​துக்கு முதலீ​டா? உங்​கள் குடும்​பத்​தின் முதலீ​டா? மக்​களுக்கு தொந்​தர​வு இருக்​கக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் வார இறு​தி​நாளில் சந்​திக்க வரு​கிறேன். அரசி​யலில் சிலருக்கு ஓய்வு கொடுப்​ப​தற்​காக​வும்​தான் ஓய்வு நாளில் வரு​கிறேன். ஆனால், மக்​களை சந்​திக்க எவ்​வளவு கட்​டுப்​பாடு​கள்? அரியலூரில் மின்​சா​ரத்தை நிறுத்​தி​விட்​டனர். திருச்​சி​யில் ஸ்பீக்​கர் வயர் கட்​டாகி​விட்​டது.

இதே​போல, ஆர்​எஸ்​எஸ் தலை​வர், பிரதமர் மோடி அல்​லது உள்​துறை அமைச்​சர் வந்​தால் கட்​டுப்​பாடு​கள் விதிப்​பீர்​களா? மின்​சாரத்தை நிறுத்​து​வீர்​களா? நிறுத்த மாட்​டீர்​கள். நீங்​கள் அவர்​களது மறை​முக உறவுக்​காரர்​கள்.

நேரடி​யாகவே கேட்​கிறேன்… முதல்​வரை நேரடி​யாகவே கேட்​கிறேன். நீங்​கள் மிரட்​டிப் பார்க்​கிறீர்​களா? குடும்​பத்தை வைத்து கொள்​ளை​யடிக்​கும் உங்​களுக்கே இவ்​வளவு இருந்​தால், சொந்​த​மாக உழைத்து சம்​பா​திக்​கும் எனக்கு எவ்​வளவு இருக்​கும்? மக்​களை சந்​திக்க நான் கேட்​கும் இடத்​துக்கு அனு​மதி தராமல், நெருக்​கடி​யாக உள்ள இடத்தை தரு​கிறீர்​கள். இந்த அடக்​கு​முறை, அராஜகம் தவறு. நான் மக்​கள் சக்​தி​யின் பிர​தி​நி​தி, மாபெரும் கட்​சி​யின் தலை​வன்.

2026-ல் திமுக​வுக்​கும், தவெக​வுக்​கும்​தான் போட்​டி. இந்த பூச்​சாண்டி வேலை​யெல்​லாம் வேண்​டாம். தில்​லாக, கெத்​தாக, நேர்​மை​யாக தேர்​தலை சந்​திக்க வாருங்​கள், நீங்​களா அல்​லது நானா என்று பார்த்​து​விடலாம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மூட்​டைக்கு ரூ.40 கமிஷன்: தொடர்ந்​து, திரு​வாரூர் தெற்கு வீதி​யில் விஜய் பேசும்​போது, “திரு​வாரூர் சொந்த மாவட்​டம் என்​கிறார்​கள். ஆனால், திரு​வாரூர் கரு​வா​டாக காய்​கிறது. சாலை வசதி இல்​லை. இங்​குள்ள அமைச்​சருக்கு முதல்​வரின் குடும்​பத்​துக்கு சேவை செய்​வது​தான் வேலை​யாக உள்​ளது. நெல் கொள்​முதல் மையங்​களில் ஒரு மூட்​டைக்கு ரூ.40 கமிஷன் வாங்​கு​கிறார்​கள். அந்த வகை​யில், பல கோடி ரூபாயை விவ​சா​யிகளிட​மிருந்து பிடுங்கி உள்​ளனர்.

கல்​வி, மருத்​து​வம், ரேஷன், வறுமை இல்​லாத தமிழகம், குடும்ப ஆதிக்​கம் இல்​லாத தமிழகம், ஊழல் இல்​லாத தமிழகம், உண்​மை​யான மக்​களாட்​சி​தான் தவெக​வின் நோக்​கம்” என்றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.