துபாய்,
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான ஊடக சந்திப்பை பாகிஸ்தான் அணி ரத்து செய்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுமாதிரி செயல்படுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஊடக சந்திப்பில் இருந்து விலகியது.
இந்த நிலையில் நிருபர்கள் சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தானுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்ர கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக பாகிஸ்தானுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது;
“பாகிஸ்தான் அணி எந்த யோசனையில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர் சந்திப்பு கட்டாயமாகும். ஏதேனும் இருந்தால் அதை ஊடகங்களில் தெரிவிப்பது அவசியமாகும்.பாகிஸ்தான் தங்களிடம் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்று நினைக்கலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்விதான் ஆசிய அமைப்பின் தலைவராக செயல்படுகிறார். ஊடக சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்கலாம் அல்லது போட்டி முடிவுகளின் பட்டியலில் ஒரு புள்ளியை குறைக்கலாம்.”
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.