ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தரா மாவட்டம் மிஹிஜாம் பகுதியை சேர்ந்தவர் மகாவீர் (வயது 40). இவரது மனைவி காஜல் தேவி. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்தபோது மகாவீரிடம் செல்போனை தருமாறு காஜல் கேட்டுள்ளார். மேலும், செலவு செய்ய பணம் தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், செல்போன், பணம் தர மகாவீர் மறுத்துவிட்டார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காஜல் வீட்டில் இருந்த கத்தியால் கணவன் மகாவீரை சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகாவீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று மகாவீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக காஜலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.