விகாஸ் மித்ராக்கள் ‘டேப்லட்’ வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி விரை​வில் அறிவிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில், ஐக்​கிய ஜனதா தள தலை​வரும் பிஹார் முதல்​வரு​மான நிதிஷ் குமார் நேற்று கூறிய​தாவது: ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்​கான அரசின் நலத்​திட்​டங்​கள் கிராம மக்​களைச் சென்​றடைய உறு​துணை​யாக இருக்​கும் விகாஸ் மித்​ராக்​களுக்கு கையடக்க கணினி (டேப்​லட்) வாங்க ஒரு முறை நிதி​யுத​வி​யாக ரூ.25 ஆயிரம் வழங்​கப்​படும்.

பல்​வேறு நலத்​திட்​டங்​களின் பயனாளர் விவரங்​களை சேமித்து வைக்​க​வும் பணியை திறம்பட செய்​ய​வும் டேப்​லட் உதவி​யாக இருக்​கும். இதன்​மூலம் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயனடைவர்.

மேலும் மாதாந்​திர போக்​கு​வரத்து படி ரூ.1,900-லிருந்து ரூ.2,500 ஆகவும் எழுதுபொருள் படி ரூ.900-லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். மகாதலித், சிறு​பான்​மை​யினர் மற்​றும் மிக​வும் பின்​தங்​கிய குழந்​தைகளுக்கு முறை​யான பள்​ளிக் கல்​வியை கற்​பிக்​கும் கல்வி உதவி​யாளர்​கள் (சிக் ஷாசேவக்​ஸ்) மற்​றும் கல்வி கற்​றல் மையங்​கள் (தலிமி மர்க்​கஸ்) ஸ்மார்ட்​போன்​கள் வாங்​கு​வதற்​காக தலா ரூ.10 ஆயிரம் வழங்​கப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.