பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: பழங்​குடி​யின மக்​களின் மொழிகளை பாது​காக்க ரூ.3 கோடி​யில் ஒலி, ஒளி ஆவணங்​களாக பதிவு செய்​யப்​பட்டு வரு​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை சார்​பில், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின இளைஞர்​களுக்​கான 3 நாள் ஆதி கலைக்​கோல் பயிற்சி பட்​டறை சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கியது. இதனை துணை முதல்​வர் உதயநிதி தொடங்கி வைத்​து, கண்​காட்​சி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த அரசு சமூக நீதி கல்​லூரி விடுதி மாணவர்​களின் ஓவி​யம் மற்​றும் சிற்​பக்​கலை படைப்​பு​களை​யும், பாரம்​பரியமிக்க இசைக்​கருவி​களை​யும் பார்​வை​யிட்​டார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: கலை என்​பது மக்​களு​டைய வாழ்க்​கை​யில் ஒரு முக்​கிய​மான அங்​க​மாகும். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மக்​களு​டைய கலை வடிவங்​களை இளம்​தலை​முறை​யினர் தெரிந்து கொள்ள வேண்​டும். ஆதி​தி​ரா​விட மக்​களு​டைய நாட்​டுப்​புற பாடல்​கள் எல்​லாம், ஒடுக்​கப்​பட்ட மக்​களு​டைய விடு​தலைக்​கான குரல்​களாக இருந்​திருக்​கின்​றன. நாட்​டுப்​புறப் பாடல்​களை கேட்​டோம் என்​றால், சமூகக் கொடுமை​கள், இயற்கை சீற்​றங்​களில் இருந்து மக்​களைக் காப்​பாற்​றிய ஹீரோக்​களை அறிந்து கொள்​ளலாம்.

அடித்​தட்டு மக்​களின் பாடலாக இருக்​கட்​டும், நடன​மாக இருக்​கட்​டும், இலக்​கிய​மாக இருக்​கட்​டும், ஓவிய​மாக இருக்​கட்​டும், அதில் ஒரு​வித​மான ஏக்​கம், கோபம், எதிர்​பார்ப்பு எல்​லாமே இருக்​கும். அடித்​தட்டு மக்​களு​டைய கலைகளில் இருப்​பவை​தான் தமிழகத்​தினுடைய உண்​மை​யான வரலாறு. மற்​றவர்​களை​விட கலைக்​கும், கலைஞர்​களுக்​கும் மதிப்​பும் மரி​யாதை​யும் எந்த நேரத்​தி​லும், எந்த இடத்​தி​லும் அதி​க​மாக கிடைக்​கும். ஆனால் அனைத்து கலைஞர்​களுக்​கும் சமமான இடம் கிடைக்​கிறதா என்​றால் இல்​லை.

உயர்​தட்டு மக்​களு​டைய கலைகளுக்கு ஒரு மதிப்​பு. உழைக்​கின்ற, ஒடுக்​கப்​பட்ட, ஏழை, எளிய மக்​களு​டைய கலைகளுக்கு வேறு மாதிரி​யான மதிப்பு நம் சமு​தா​யத்​தில் இருந்து வரு​கிறது. இந்த ஏற்​றத்​தாழ்வை உடைக்​கும் முயற்​சிகளை தொடர்ந்து திமுக அரசு எடுத்து கொண்​டிருக்​கிறது. இன்​றைக்கு ஆதி​தி​ரா​விடர் மக்​களின் கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் இலக்​கியப் படைப்​பு​கள், ஆங்​கிலத்​தில் மொழிபெயர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. பழங்​குடி​யின மக்​களு​டைய மொழிகளை பாது​காக்க ரூ.3 கோடி​யில் ஒலி, ஒளி ஆவணங்​களாக பதிவு செய்​யப்​பட்டு தொடர்ந்து அந்த சேவை​களை​யும் அரசு செய்து கொண்​டிருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், மா.ம​திவேந்​தன், தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக்​கழக தலை​வர் நா.இளை​ய​ராஜா, துறை செயலர் க.லட்​சுமி பிரி​யா, ஆணை​யர் த.ஆனந்த், தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக்​கழக மேலாண்மை இயக்​குநர் க.சு.கந்​த​சாமி, தமிழ்​நாடு எம்​ஜிஆர் திரைப்பட மற்​றும் தொலைக்​காட்சி நிறு​வனத்​தின் தலை​வர்​ டிராட்​ஸ்​கி மருது உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.