தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கு எஃகு கட்டமைப்புகளின் தரம்: அமைச்சர் வேலு உறுதி

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான பாலத்​துக்​கான எஃகு கட்​டமைப்​பு​களின் தரச் சோதனை மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களில் எந்​த​வித சமரச​மும் செய்​யப்பட மாட்​டாது என்று தயாரிப்​பிடத்​தில் நேரில் ஆய்வு செய்த அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​தார்.

சென்னை தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்​துக்கு ரூ.621 கோடி​யில் உயர் மட்ட மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இப்​பணியை விரை​வில், தரமான முறை​யில் நிறைவு செய்​யும் வகை​யில், முன்​னோக்​கிய கட்​டமைப்பு (Pre-fabricated) முறை​யில், 15 ஆயிரம் டன் எஃகுக் கட்​டமைப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதற்​கான உற்​பத்தி பணி​கள் வதோத​ரா, ஹைத​ரா​பாத் உள்​ளிட்ட 5 நகரங்​களில் உள்ள தொழிற்​சாலைகளில் நடை​பெறுகின்​றன. இப்​பணி​களை நேற்று அமைச்​சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்​தார். குஜ​ராத் மாநிலம், வதோத​ரா​வில் உள்ள கே.பி. கிரீன் தொழிற்​சாலை​யில் தயாரிக்​கப்​பட்டு வரும் முன் வார்க்​கப்​பட்ட எஃகு தூண்​கள் (Pier), மேல் தாங்​கி​கள் (Pier-Cap), உத்​திரங்​கள் (Girder) ஆகிய​வற்​றின் உற்​பத்​தி​யை​யும், தரத்​தை​யும், சோதனைச் சான்​றுகள் மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களை​யும் அமைச்​சர் ஆய்வு செய்​தார்.

இதுகுறித்து அமைச்​சர் வேலு கூறும்​போது, “மேம்​பாலப் பணி​கள் திட்​ட​மிட்ட காலக்​கெடு​வுக்​குள் நிறைவு செய்​யப்​படு​வதை உறுதி செய்ய தினசரி கண்​காணிப்பு மேற்​கொள்​ளப்​படு​கிறது. தரச்​சோதனை மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களில் எந்​த​வித சலுகை​யும் கிடை​யாது.

இந்த மேம்​பாலப் பணி​கள் நிறைவடைந்​தவுடன், அண்ணா சாலைப் பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் குறை​யும், தேனாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையே​யான பயண நேரம் பெரிதும் குறை​யும்” என்​றார். ஆய்​வின்​போது, நெடுஞ்​சாலைத் துறை தலைமை பொறி​யாளர் (கட்​டு​மானம், பராமரிப்​பு) கு.கோ.சத்​தி​யபிர​காஷ் உள்ளிட்டோர் உடனிருந்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.