நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு: இமாச்சல பிரதேசத்தில் மேடையிலேயே உயிர்நீத்த நாடக நடிகர்

சம்பா: நடித்துக் கொண்டிருக்கும்போதே ​மாரடைப்பு ஏற்​பட்​ட​தில் மேடை​யிலேயே நாடக நடிகர் உயி​ரிழந்த சம்​பவம் இமாச்சல பிரதேச மாநிலத்​தில் நடந்​துள்​ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா பகு​தி​யைச் சேர்ந்​தவர் அம்​ரேஷ் மகாஜன் (70). நாடக நடிக​ரான இவர், பல்​வேறு நாடகங்​களில் பல வேடங்​களில் நடித்து ரசிகர்​களின் பாராட்​டைப் பெற்​றவர்.

பெரும்​பாலும் இவர் ராமாயணம், மகா​பாரதம், ராம்​லீலா போன்ற நாடங்​களில் நடிப்​பார். நேற்று முன்​தினம் இவர் சம்பா பகு​தி​யில் நடை​பெற்ற ராம்​லீலா நாடகத்​தில் தசரத மகா​ராஜா வேட​மிட்டு நடித்​துக் கொண்​டிருந்​தார். ராஜ சபை​யில் சிம்​மாசனத்​தில் அமர்ந்து அம்​ரேஷ் மகாஜன், தசரத​னாக நடித்​துக் கொண்​டிருந்​தார். அப்​போது இவர் திடீரென சிம்​மாசனத்​திலேயே மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவரை அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

ஆனால் மருத்​து​வ​மனைக்கு வரும் வழி​யிலேயே அம்​ரேஷ் மகாஜன் உயி​ரிழந்து விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். அவருக்கு கடுமை​யான மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் உயி​ரிழந்​துள்​ளார் என்​றும் அவர்​கள் தெரி​வித்​தனர்.

வயதான காலத்​தி​லும் அம்​ரேஷ் மகாஜன் தசரதன், ராவணன் உள்​ளிட்ட வேடங்​களை ஏற்று நடித்து வந்​தார். தான் பங்​கேற்​கும் இந்த ராம்​லீலா நாடகம்​தான் தனது கடைசி நாடகம் என்று அனை​வரிட​மும் அம்​ரேஷ் மகாஜன் கூறி வந்​தா​ராம். அதன்​படியே அவர் நடித்​துக் கொண்​டிருக்​கும் போதே மேடை​யிலேயே உயி​ரிழந்​து​விட்​டார். அவர் மேடை​யிலேயே உயி​ரிழந்​ததைப் பார்த்து சக நடிகர், நடிகைகள் கண்​கலங்கி அழுதது பார்ப்​பவர் நெஞ்​சை உருக்​கு​வ​தாக அமைந்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.