துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் 2 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளன. ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.