ஐ.நா. சபையின் ஏஐ சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை பரிந்துரைத்தது இந்தியா

சென்னை: ஐ.​நா. சபை​யின் டிஜிட்​டல் மற்​றும் வளரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்​தின் சிறப்பு மைய​மாக சென்னை ஐஐடியை மத்​திய அரசு பரிந்​துரை செய்​துள்ளது என்று மின்​னணு​வியல், தகவல் தொழில்​நுட்​பத்துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன் தெரிவித்தார்.

தற்​போதைய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) காலச்​சூழலில் சவால்​களை திறம்பட கையாள்​வதற்​காக டிஜிட்​டல் மற்​றும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்தை (ODET) ஐக்​கிய நாடு​கள் சபை அமைத்​துள்​ளது. அதன்​படி, ஒவ்​வொரு நாடும் ஐ.நா. சபை​யின் இந்த அலு​வல​கத்​தால் ஆதரிக்​கப்​பட்ட கல்வி நிறு​வனங்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும்.

இந்​நிலை​யில், ஐ.நா. சபை​யின் 80-வது பொதுச்​சபை கூட்​டம் நியூ​யார்க்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் இந்​தியா சார்​பில் மத்​திய மின்​னணு​வியல், தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சகத்​தின் செயலர் எஸ்​.கிருஷ்ணன் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்டார். அவர் பேசி​ய​தாவது: செயற்கை நுண்​ணறி​வு, திறன் மேம்​பாடு மற்​றும் வளரும் தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றில் தனது ஆதரவை சென்னை ஐஐடி சிறந்த முறை​யில் அளித்து வரு​கிறது. இந்த கல்வி நிறு​வனத்தை டிஜிட்​டல் மற்​றும் வளரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான ஐ.நா. அலு​வல​கத்​தின் சிறப்பு மைய​மாக இந்​தியா பரிந்​துரை செய்​கிறது.

மேலும், 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் ஏஐ சார்ந்த உச்சி மாநாட்டை இந்​தியா நடத்த உள்​ளது. இதில் ஐ.நா. உறுப்பு நாடு​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​களும் பங்​கேற்க வேண்​டும். இவ்​வாறு எஸ்.கிருஷ்ணன் பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.