மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

மதுரை: மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் வாங்​கிய​தில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கக் கோரிய மனு மீதான விசா​ரணை, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

மதுரை உசிலம்​பட்​டியைச் சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மின் வாரி​யத்​துக்கு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களில் மின்​மாற்​றிகள் வாங்க முடிவு செய்​யப்​பட்​டது.

இதற்​கான டெண்​டரில் பங்​கேற்ற அனை​வரும் முன்​கூட்​டியே முடிவு செய்து ஒரே தொகையை குறிப்​பிட்டுள்​ளனர். அனைத்து நிலை அதி​காரி​களும் இணைந்து டெண்​டரில் பங்கேற்ற அனை​வருக்​கும் பணி​களை சமமாகப் பிரித்​துக் கொடுத்​துள்ளனர். இந்த டெண்​டர்​படி வெவ்​வேறுதிறன் மிக்க 26,300 மின்​மாற்​றிகளை ரூ.1,068 கோடிக்கு வாங்​கி​யிருக்க வேண்​டும். அதி​காரி​கள் தவறு காரண​மாக சுமார் ரூ.350 கோடி அதி​க​மாக கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

மின்​மாற்றி கொள்​முதல் செய்​வ​தில் சாதாரண நிலை அதி​காரி​களால் முடி​வெடுக்க முடி​யாது. மின்​வாரிய உயர் அதி​காரி​களும், அப்​போதைய மின்​துறை அமைச்​சர் செந்​தில்​பாலாஜி​யும் இணைந்து முடிவு செய்து மின்​மாற்​றிகள் வாங்​கி​யுள்​ளனர்.

எனவே, தமிழக மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் கொள்​முதல் செய்​யப்​பட்​ட​தில் நடந்​துள்ள முறை​கேடு தொடர்​பாக தமிழக மின்​வாரி​யத் தலை​வர், டெண்​டர் கோரும் அதி​கார அமைப்​பு, டெண்​டர் உறுதி செய்​யும் குழு, அப்​போதைய மின்​துறை அமைச்​சர் செந்​தில் பாலாஜி ஆகி யோரிடம் முறை​யாக விசா​ரிப்​ப​தற் காக சிறப்பு விசா​ரணை குழுவை அமைக்க உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில், “இது​போன்ற வழக்​கு​கள் சென்னை உயர்​நீ​தி​மன்ற முதன்மை அமர்வில் விசா​ரணை​யில் உள்ளன. இந்த வழக்​கை​யும் சென்​னைக்கு மாற்ற வேண்​டும்” என்று தெரிவிக்கப்​பட்​டது. இதையடுத்​து, மனு மீதான விசா​ரணையை சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்றி, நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.