தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

புதுடெல்லி: விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானை பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா நியமனம் செய்​துள்​ளார். அவருக்கு உதவி​யாக மத்​திய அமைச்​சர் சி.ஆர்​.​பாட்​டீல் மற்​றும் உத்தர பிரதேச துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மவுரியா செயல்​படு​வார்​கள் என்று பாஜக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

2026-ம் ஆண்டு தேர்​தலை சந்​திக்க உள்ள மேற்கு வங்​கத்​துக்கு மத்​திய அமைச்​சர் பூபேந்​திர யாதவை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ளது. அவருக்கு உதவிட திரிபுரா முன்​னாள் முதல்​வர் பிப்​லப் தேவ் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

அதேபோன்​று, தமிழகத்​துக்​கும் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் பாஜக எம்பி வைஜயந்த் பாண்டா தேர்​தல் பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை அமைச்​சர் முரளிதர் மொஹோல் உதவி​யாக இருப்​பார் என்று பாஜக தெரி​வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.