சென்னை: சென்னையில், நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த பகுதி சாலையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெய்சங்கர் சாலை என்ற பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மறைந்த தலைவர்கள், நடிகர்கள் போன்றோரை கவுரப்படுத்தும் வகையில், அவர்கள் வசித்து வந்த பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்று சென்னையில், நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை, […]
