சென்னை: தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 121வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், 27.9.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் […]
