பாடநூல் கழகம் சார்பில் 26 நூல்கள் வெளியிட்டார் ஸ்டாலின்: ரூ.39 கோடியில் 146 நூலக கட்டிடங்கள் திறப்பு

சென்னை: தமிழ்​நாடு பாடநூல் கழகம் சார்​பில் 26 புதிய நூல்​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகம் சார்​பில் அரிய நூல்​கள், நாட்​டுடைமை நூல்​கள், மூத்த வரலாற்று அறிஞர்​களின் தமிழ்​நாட்டு வரலாறு அரிய நூல்​கள், நூற்​றாண்டு காணும் ஆளு​மை​கள், முத்​தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்​டம், இளந்​தளிர் இலக்​கி​யத் திட்​டம், செவ்​வியல் நூல்​கள் ஆகிய பிரிவு​களின் கீழ் 26 புதிய நூல்​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வெளி​யிட்​டார்.

பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டபடி, 821 பொது நூல​கங்​களுக்கு சிறப்பு நிதி​யுத​வியாக ரூ.213.46 கோடி அனு​ம​திக்​கப்​பட்​டது. இதில் தற்​போது, ஊரக வளர்ச்​சித்துறை மூலம் 90 நூல​கங்​கள், பேரூ​ராட்​சிகள் இயக்​ககம் மூலம் 32 நூல​கங்​கள், நகராட்சி நிர்​வாகத் துறை மூலம் 20 நூல​கங்​கள் என அனைத்து மாவட்​டங்​களி​லும் ரூ.31.24 கோடி​யில் நூலக கட்​டிடங்​கள், ரூ.2.84 கோடி​யில் நூல்​கள், ரூ.2.05 கோடி​யில் தளவாடங்​கள், ரூ.78 லட்​சத்​தில் கணினி தொடர்​புடைய சாதனங்​கள் என ரூ.36.92 கோடி​யில் நூல​கங்​கள் தயா​ராகி​யுள்​ளன. மேலும், கோயம்​புத்​தூர் – பெரிய​நாயக்​கன்​பாளை​யம், ஈரோடு – கோபிசெட்​டி​பாளை​யம், ஆலாம்​பாளை​யம், அரியலூர் – ஜெயங்​கொண்​டம் ஆகிய இடங்​களில் ரூ.2.41 கோடி​யில் 4 நூல​கங்​கள் என ரூ.39.33 கோடி​யில் 146 நூலக கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். கள்​ளக்​குறிச்​சி​யில் 4 தளங்​களு​டன் ரூ.4.01 கோடி​யில் கட்​டப்பட உள்ள மாவட்ட மைய நூல​கத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்த நிகழ்​வில் அமைச்​சர் அன்​பில் மகேஸ், பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் சந்​திரமோகன், தமிழ்​நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகத் தலை​வர் ஐ.லியோனி, மேலாண்மை இயக்​குநர் ஆர்த்​தி, உதவி இயக்​குநர் சர​வணன், உறுப்​பினர் – செயலர் உஷா​ராணி,பொது நூலக இயக்​குநர் ஜெயந்​தி, இணை இயக்​குநர் இளங்கோ சந்​திரகு​மார்​ பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.