திண்டுக்கல்,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அதை ‘சமூக நீதி கணக்கெடுப்பு’ என்று அழைக்கவும்.
மூன்று லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டு, ரூ.500 கோடி பட்ஜெட்டில், சுமார் 2 மாத காலத்தில் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். இது சாதி அல்லது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல, மாறாக சமூக நீதி தொடர்பான விஷயம். தி.மு.க.வின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.