தொடர் விடுமுறை எதிரொலி: விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் திணறிய வாகனங்கள்

விழுப்புரம்: காலாண்டு தேர்வு விடு​முறை மற்​றும் ஆயுத பூஜை தொடர் விடு​முறை​யால், சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு குடும்​பம் குடும்​ப​மாக கார் உள்​ளிட்ட வாக​னங்​களில் மக்​கள் நேற்று முன்​தினம் இரவு முதல் புறப்​பட்​டுச் செல்​கின்​றனர். இதனால் விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்​டி​யில் உள்ள சுங்​கச் சாவடி​யில் நேற்று கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, வாக​னங்​கள் எளி​தாக கடந்து செல்ல கூடு​தலாக 2 வழித்​தடங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டன. மொத்​தம் 9 வழித்​தடங்​களில் வாக​னங்​கள் செல்​வதற்கு அனு​ம​திக்​கப்​பட்​டாலும் 30 நிமிடங்​கள் காத்​திருக்க வேண்​டிய சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

நேற்று முன்​தினம் நள்​ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரை 32 ஆயிரம் வாக​னங்​கள் விக்​கிர​வாண்டி சுங்​கச் சாவடியை கடந்து சென்​றுள்​ளன. வழக்​க​மாக 24 ஆயிரம் வாக​னங்​கள் கடந்து செல்​லும் நிலை​யில் கூடு​தலாக 8 ஆயிரம் வாக​னங்​கள் கடந்​துள்​ளன. இதன் எண்​ணிக்கை நள்​ளிரவு 12 மணி​யள​வில் சுமார் 40 ஆயிரத்தை கடந்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.