நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 31 பேரை நாடு கடத்த நடவடிக்கை

ஒட்டன்சத்திரம்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் ஒட்​டன்​சத்​திரம் அரு​கே​யுள்ள நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தினர் 31 பேரை நாடு கடத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஒட்​டன்​சத்​திரம் அருகே வாகரை​யில் உள்ள ஒரு தனி​யார் நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கிப் பணிபுரிந்து வந்த 31 பேரை மே 24-ம் தேதி கள்​ளிமந்​தை​யம் போலீ​ஸார் கைது செய்​தனர். இதில் ஒரு சிறு​வனை மட்​டும் மதுரை சிறு​வர்​கள் காப்​பகத்​தி​லும், மற்ற 30 பேரை சென்னை புழல் சிறை​யிலும் அடைத்​தனர்.

இவ்​வழக்​கில் சிறு​வன் உட்பட 2 பேருக்கு 115 நாட்​கள், மீத​முள்ள 29 பேருக்கு 125 நாட்​கள் சிறைத் தண்​டனை மற்​றும் அனை​வருக்​கும் தலா ரூ.100 அபராத​மும் விதிக்​கப்​பட்​டது. இவ்​வழக்கு ஒட்​டன்​சத்​திரம் நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. நேற்று விசா​ரணை நிறைவடைந்த நிலை​யில் 31 பேரின் சிறைக் காலத்தை தண்​டனைக் கால​மாக அறி​வித்​தும், ஒவ்​வொரு​வருக்​கும் தலா ரூ.100 அபராதம் விதித்​தும் நீதிபதி கபாலீஸ்​வரன் தீர்ப்​பளித்​தார்.

இதையடுத்​து, சிறு​வனை திண்​டுக்​கல் காந்தி கிராம காப்​பகத்​தி​லும், மற்ற 30 பேரை​யும் மதுரை சிறை​யிலும் அடைத்​தனர். இவர்​களை நாடு கடத்​து​வதற்​கான நடவடிக்கை மேற்கொள்​ளப்​பட்​டுள்​ளது. இதே​போல, திண்டுக்​கல் மாவட்​டத்​தில் பிற நாடு​களைச் சேர்ந்​தோர் தங்​கி​​யிருந்​தால், அவர்​கள் மீதுசட்ட ரீதியான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.