ஆசிய கோப்பை தொடரின் 17வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 09ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களுடன் ஹாங்காங், யுஏஇ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் வெளியேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் விளையாடிய 4 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.
Add Zee News as a Preferred Source
மழை குறிக்கிடுமா?
இந்த இறுதி போட்டியான இன்று (செப்டம்பர் 28) நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றிலேயே இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது இதுதான் முதல் முறை. இதன் காரணமாக ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா? என்ற அபாயம் எழுந்துள்ளன. அது குறித்து பார்க்கலாம்.
நடப்பு ஆசிய கோப்பையில் இதுவரை எந்த போட்டியும் மழையால் பாதிக்கப்படவில்லை. அதேபோல், இறுதி போட்டியும் மழையால் பாதிக்கப்படாது என அங்குள்ள வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வானிலையை எப்போது 1005 உறுதியாக சொல்லிவிட முடியாது. அந்த வகையில், ஒருவேளை மழை பெய்தால் இந்த்யா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதி போட்டி என்னவாகும்.
ஒருவேளை மழை குறிக்கிட்டு போட்டி தொடங்க முடியவில்லை என்றால், ஆட்டம் ரிசர்வ் டே-வுக்கு அதாவது மறுநாள் ஒத்திவைக்கப்படும். ஒருவேளை ரிசர்வ் டே-வும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால், கோப்பை ஒரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிகிறது.
இரு அணிகளுக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11
இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
பாகிஸ்தான் அணி: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.
About the Author
R Balaji