விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறி​னார்.

கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது, “கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 39 பேரும் சடல​மாகத்​தான் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு வரப்​பட்​டனர். மயங்கி விழுந்​தவர்​களில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 40-ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது 80 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்” என்​றார்.

ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறிய​தாவது: கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள லைட்​ஹவுஸ் முனை பகு​தியை முதலில் தவெக​வினர் கேட்​டனர். அங்கு பெட்​ரோல் பங்க், அமராவதி ஆறு உள்​ள​தா​லும், நெருக்​கடி​யான இடம் என்​ப​தா​லும் அனு​மதி வழங்​க​வில்​லை. உழவர்​சந்தை பகு​தி​யும் குறுகலான பகுதி என்​ப​தால் அனு​மதி வழங்​க​வில்​லை. வேலு​சாமிபுரத்​தில் ஏற்கெ​னவே வேறு கட்சி பிரச்​சா​ரம் செய்​த​தால் அந்த இடம் வழங்​கப்​பட்​டது. கூட்​டம் அதி​க​மான இடங்​களில் 50 பேருக்கு ஒரு​வர் வீதம் பணி​யில் அமர்த்​தப்​படு​வார். கரூரில் 20 பேருக்கு ஒரு​வர் என ஒரு எஸ்​.பி, 4 ஏடிஎஸ்​பி, டிஎஸ்​பிகள், இன்​ஸ்​பெக்​டர்​கள், சப்​-இன்​ஸ்​பெக்​டர்​கள், போலீ​ஸார் என 500 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மற்ற இடங்​களை​விட அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது.

வேலு​சாமிபுரத்​தில் நடந்த பரப்​புரை​யின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்​லை. தவெக தலை​வரின் வாக​னம் கரூர் மாவட்​டம் தளவா​பாளை​யத்​தில் இருந்து திரு​காம்​புலியூர் ரவுண்​டானா வர 2 மணி நேர​மாகியது. சாதா​ரண​மாக 30 நிமிடங்​களில் அந்த இடத்​தைக் கடந்​து​விடலாம். சிறிது நேரம் வாக​னத்​திலிருந்து வெளியே வந்த தவெக தலை​வர், பின்​னர் உள்ளே சென்​று​விட்​டார். இதனால், அங்​கிருந்​தவர்​களுக்கு அவரை பார்க்​கும் ஆர்​வம் அதி​கரித்​தது.

அதீத கூட்​டத்​தால் பிரச்​சார இடத்​துக்கு முன்பே வாக​னத்தை நிறுத்தி பிரச்​சா​ரம் செய்​யும்​படி போலீ​ஸார் கூறி​யுள்​ளனர். ஆனால், அந்த அறி​வுறுத்​தலை ஏற்​காமல், திட்​ட​மிட்ட இடத்​திலேயே பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர். சம்பவ இடத்​தில் இருந்த போலீ​ஸார் கேட்​டுக்​கொண்​ட​தாலேயே 10-க்​கும் மேற்​பட்ட ஆம்​புலன்​ஸ்​கள் அனுப்​பப்​பட்​டன. கூட்​டம் காரண​மாக ஆம்​புலன்​ஸ்​கூட உள்ளே செல்ல முடிய​வில்​லை. அனு​ம​தி​கேட்ட நேரத்​தை​விட 4 மணி நேரம் தாமத​மாகவே பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். அதிக கூட்​டம் கூடும்​போது அரசி​யல் கட்​சி​யினர் ஒத்​துழைப்பு வழங்​கவேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட​வில்லை: மின் வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி கூறும்​போது, “விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட​வில்​லை. விஜய் வரு​வதற்கு முன்பு டிரான்​ஸ்​பார்​மரிலும், மரத்​தி​லும் சிலர் ஏறிய​தால் மின்​சா​ரத்தை துண்​டித்​து, காவல் துறை மூலம் அவர்​களை கீழே இறக்​கிய பின்​னர் மீண்​டும் மின் விநி​யோகம் செய்யப்​பட்​டது” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.