2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு

சூரத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்​லட் ரயில் திட்​டத்தை மத்​திய அரசு கட்​டமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று சூரத் பகு​தி​யில் கட்​டப்​படும் ரயில் நிலை​யத்தை மத்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பார்​வை​யிட்​டார்.

பின்​னர் அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் புல்​லட் ரயில் திட்​டத்​தின் சூரத் மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள பிலிமோரா இடையே​யான 50 கி.மீ. நீளத்​துக்கு 2027-ம் ஆண்டு திறக்​கப்​படும். மேலும் 2029-ம் ஆண்​டுக்​கு மும்​பை அகம​தா​பாத் இடையே​யான முழுத் திட்​ட​மும் செயல்​பாட்​டுக்கு வந்​து​விடும்.

செயல்​பாட்​டுக்கு வந்த பிறகு, மும்பை – அகம​தா​பாத் இடையே​யான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்​களில் புல்​லட் ரயில் கடந்​து​விடும். 2028-ம் ஆண்​டுக்​குள், தானே – அகம​தா​பாத் பகுதி முழு​வதும் இயக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.