அயோத்தியை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: பாஜக-வின் வினய் கட்டியார் அறிவிப்பால் சர்ச்சை

புதுடெல்லி: உ.பி. அயோத்​தி​யில் இருந்து 3 முறை எம்​.பி.​யாக இருந்​தவர் பாஜக மூத்த தலை​வர் வினய் கட்​டி​யார். அயோத்தி ராமர் கோயி​லில் தரிசனம் செய்த அவர் செய்​தி​யாளர் கூட்​டத்​தில் முஸ்​லிம்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் பேசி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை​யில், “அயோத்​தி​யில் வசிக்​கும் முஸ்​லிம்​களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்​லை. அவர்​கள் விரை​வில் வெளி​யேற வேண்​டும். அண்டை மாவட்​டங்​களான கோண்டா மற்​றும் பஸ்​திக்கு செல்ல வேண்​டும். அப்​போது​தான் அயோத்​தி​யில் இந்​துக்​கள் முழு உற்​சாகத்​துடன் தீபாவளியைக் கொண்​டாடு​வோம். பாபர் மசூதி அல்​லது வேறு எந்த மசூ​திக்​கும் பதிலாக புதிய மசூதி அயோத்​தி​யில் கட்ட அனு​ம​திக்​கப்​ப​டாது” என்று தெரி​வித்​துள்​ளார்.

அவரது இந்​தப் பேச்​சு, இந்​திய சட்​டத்​தின் கீழ் வெறுப்​புப் பேச்சு குற்​ற​மாகக் கருதப்​படு​கிறது. இருப்​பினும், அவர் மீது இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மையி​லான பாஜக அரசு மற்​றும் கட்​சி​யினர் கட்​டி​யாரின் இந்த கருத்​துக்கு அமைதி காக்​கின்​றனர். உச்ச நீதி​மன்​றத்​தின் 2019 தீர்ப்​பின்​படி அயோத்​தி​யில் இடிக்​கப்​பட்ட பாபர் மசூ​திக்கு பதிலாக புதிய மசூதி கட்ட அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதை​யும் வினய் கட்​டி​யார் எதிர்த்து வரு​கிறார்.

கட்​டி​யார் நீண்ட கால​மாக ராம ஜென்​மபூமி இயக்​கத்​துடன் தொடர்​புடைய​வர். 1984-ல் விஸ்வ இந்து பரிஷத்​தின் இளைஞர் பிரி​வான பஜ்ரங் தளத்தை நிறு​விய அவர், ராமர் கோயில் கட்​டும் பிரச்​சா​ரத்​தில் முக்​கிய பங்கு வகித்​தார்.

கடந்த 2006, 2012-ம் ஆண்​டு​களில் மாநிலங்​களவை எம்​.பி.​யாக​வும் இருந்​தார். 1992-ல் பாபர் மசூதி இடிப்பு வழக்​கில் இவர் முக்​கிய குற்​ற​வாளி​களில் ஒரு​வ​ராக இருந்​தார். சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் 2020-ம் ஆண்​டில் அவர்​ உட்பட 32 பேரை விடுவித்தது நினைவுகூரத்தக்கது.வினய் கட்டியார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.